Home /News /national /

பிரதமர் மோடிக்கு  கிடைத்த  பரிசு பொருட்கள் ஏலம்!! ஏலத்தில் கிடைக்கும் பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா??

பிரதமர் மோடிக்கு  கிடைத்த  பரிசு பொருட்கள் ஏலம்!! ஏலத்தில் கிடைக்கும் பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா??

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இணையதளத்தில் நடைபெறும் இந்த ஏலம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களை  ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் மாநாடுகளில் அவருக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அந்த பரிசு பொருட்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு. பின்னர் அதனை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

    2019 -  2021 ஆண்டு டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் நினைவு சின்னங்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ரூ.22.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்தது. அந்த ஏலத்தில் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அந்த ஈட்டியை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் . கடந்த ஆண்டு விடப்பட்ட ஏலத்தில் நிரஜ் சோப்ரா வழங்கிய ஈட்டி சுமார் ரூ.1.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் இந்த ஏலாத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கங்கை நதியை சுத்தம் செய்ய வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் இந்தாண்டு சுமார் 1,200 பொருட்களை ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. www.pmmementos.gov.in.  என்ற இணையதளத்தில் நடைபெறும் இந்த ஏலம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:  2030க்குள் கால்நடை நோய்கள் முற்றாக கட்டுப்படுத்தப்படும் - பிரதமர் மோடி நம்பிக்கை

    விளையாட்டு வீரர்கள் பிரதமர் மோடிக்கு வழங்கிய பரிசு பொருட்கள் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கிய அனுமன் சிலை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கிய வெங்கடேச பெருமாள் சாமி சிலை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வழங்கிய மகாலட்சுமி சிலை மற்றும் சால்வை, துண்டு உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் இந்த ஏலத்தில் விடப்படுகிறது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: PM Modi

    அடுத்த செய்தி