ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 21-வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லி வந்துள்ளார். அவரை வரவேற்ற பிரதமர் மோடி, அவருடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின்போது, ''கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு சவால்களை இருநாடுகளும் எதிர்கொண்டன. இருப்பினும் இந்தியா - ரஷ்யா உறவில் வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது'' என்று பிரதமர் மோடி புதினிடம் கூறியுள்ளார்.
மோடியுடனான சந்திப்பின் போது பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ''இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு தனித்தன்மை வாய்ந்தது. ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு புதுடெல்லியின் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதன்படி ஏகே 203 ரக துப்பாக்கிகள், 6 லட்சம் எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யா உதவியுடன் தயாரிக்கவுள்ளது. அதாவது இந்த 6 லட்சம் துப்பாக்கிகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். அதற்கான தொழில்நுட்ப உதவிகளை ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கும். 5100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
Also Read : 'விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது நரேந்திர மோடி'- நாக்குத் தவறிய சித்தராமையா
இதேபோன்று 2031 ஆம் ஆண்டு வரை தொழில்நுட்ப ரீதியாக, ரஷ்யா, இந்திய ராணுவத்திற்கு உதவிகளை வழங்கும். இதற்கான ஒப்பந்தம் இன்று ஏற்படுத்தப்பட்டது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யாவுடனான ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரஷ்யா உதவியுடன் தயார் செய்யப்படும் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தற்போது நடைமுறையில் இருக்கும் இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படும்.
குறைந்த எடை கொண்ட ஏ.கே. 203 துப்பாகிகள், 300 மீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை.
Also Read : Covid-19: கருவுற்ற தாய்மார்களை கொரோனா பாதித்தால் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்படுமா?
பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, விண்வெளி, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் 10க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் இந்தியா - ரஷ்யா இடையே ஏற்படுத்தப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi, Putin India Visit