விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்... கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2000 இன்று டெபாசிட்!

பிரதமர் மோடி!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

  • Share this:
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதி ரூ.19 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை விடுவிக்கிறார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று  காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவித்தார்.  இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: