கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்த மோடி

news18
Updated: June 13, 2018, 11:14 AM IST
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்த  மோடி
உடற்பயிற்சி செய்கிறார் பிரதமர் மோடி.
news18
Updated: June 13, 2018, 11:14 AM IST
விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை   வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், பிரபலங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுமாறு மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதத்தில் வெளியிட்ட இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தினமும் காலையில் யோகா, நடைபயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  தினந்தோறும் யோகா செய்வது மட்டுமின்றி ஐம்பூத சக்தியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் நடைப்பயிற்சியையும் செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  இவை மட்டுமின்றி, மூச்சுப்பயிற்சியையும் செய்வதாக மோடி தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சிகள் அனைத்துமே தனக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள் வென்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, 40 வயதுக்கு மேலான ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோரும் உடற்பயிற்சி செய்து வீடியோவை வெளியிட வேண்டும் என மோடி சவால் விடுத்துள்ளார் விடுத்துள்ளார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...