ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா - ஜப்பான் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் குறித்தும் இந்த பயணத்தின் போது விவாதிக்கப்பட உள்ளது.

news18
Updated: October 27, 2018, 9:31 PM IST
ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!
ஜப்பானில் மோடியை வரவேற்கும் இந்தியர்கள்
news18
Updated: October 27, 2018, 9:31 PM IST
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா - ஜப்பான் நாடுகள் இடையிலான 13-வது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டோக்கியோவுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். இந்தியா - ஜப்பான் இடையிலான உச்சி மாநாட்டில் 5-வது முறையாக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் பல்வேறு முக்கிய விவகாரங்களை விவாதிக்க உள்ளனர்.

கொரிய தீபகற்பத்தில் முக்கியமாக வடகொரியாவுக்கும், ஜப்பானுக்கும் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய - பசிபிக் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.  இரு நாடுகள் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் குறித்தும் இந்தப் பயணத்தின் போது விவாதிக்கப்பட உள்ளது.

இதனிடையே டோக்கியோவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபியூஜி  மலைப்பகுதியில் அமைந்துள்ள தனது விடுமுறை கால இல்லத்தில், பிரதமர் மோடிக்கு அபே விருந்து அளிக்க உள்ளார். தனது ஓய்வு இல்லத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அபே விருந்து அளிப்பது இதுவே முதன்முறையாகும்.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, பிரதமர் மோடிக்கு ஜப்பான் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைநகர் டோக்கியோவிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார். அப்போது, ஏராளமான இந்தியர்கள் இந்திய தேசியக் கொடிகளை ஏந்தி வரவேற்பு அளித்தனர். பின்னர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

Also watch

First published: October 27, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...