Home /News /national /

மக்கள் நலனுக்காவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் - பிரதமர் மோடி

மக்கள் நலனுக்காவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மக்கள் நலனுக்காவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து, பசும்பொன்னில் இன்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில், மக்கள் நலனுக்காவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் நினைவு கூர்ந்துள்ளார்.



    மேலும், தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்ட அவர், மக்கள் நலனுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றியவர் எனக் கூறியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Muthuramalinga Thevar, Thevar Jayanthi

    அடுத்த செய்தி