Home /News /national /

'பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி' - பஞ்சாப் அரசு மீது உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

'பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி' - பஞ்சாப் அரசு மீது உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

நடந்த சம்பவம் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அளித்துள்ள விளக்கத்தில் , பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அளித்துள்ள விளக்கத்தில் , பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அளித்துள்ள விளக்கத்தில் , பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

    பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி செய்திருப்பதாக பஞ்சாப் அரசு மீது மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக பிரதமர் மோடி சுமார் 20 நிமிடங்கள் தனது பாதுகாவலர்களுடன் மேம்பாலத்தில் இருந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் சில நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை அங்கு சென்றார். முதலில் பதிண்டாவுக்கு வந்த மோடி, அங்கிருந்து தேசிய தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள ஹுசைனிவாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

    இதையும் படிங்க :

    சனி, ஞாயிறுகளில் பேருந்து போக்குவரத்து ரத்து - கொரோனா பரவலால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடு



    அப்போது, வெளிச்சம் குறைவு, தொடர் மழை காரணமாக, சாலைப் பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டரில் மோடி செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. வானிலை சரியாக அமையாத காரணத்தால் சாலை மார்க்கமாக மோடி செல்வதற்கு பயணத்திட்டம் மாற்றப்பட்டது. அதற்கு முன்பாக, பஞ்சாப் டிஜிபியிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி செல்லக் கூடிய வழியில் மிகச்சரியாக உள்ளதென உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மோடி செல்லும் வழியில், விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் இருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

    இதையும் படிங்க : சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த Cowin போர்ட்டலில் முன்பதிவு செய்வது எப்படி?

    இதற்கு பொறுப்பேற்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இதுபற்றிகூறும்போது, 'பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பஞ்சாபுக்கு வழங்குவதற்காக அங்கு சென்றார். அவரது பாதுகாப்பில் இப்படியொரு குளறுபடி ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இதை பஞ்சாப் முதல்வர் நினைத்திருந்தால் சரி செய்திருக்கலாம்' என்று விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க :

    இவர்களையெல்லாம் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு பரிந்துரை



    நடந்த சம்பவம் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அளித்துள்ள விளக்கத்தில் ,'பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படவில்லை. அவர் முதலில் ஹெலிகாப்டரில்தான் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் பயணம் சாலை மார்க்கத்திற்கு மாறி விட்டது. நான் போராட்டக்காரர்களுடன் பேசி 3 மணிக்குள்ளாக கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டேன்.' என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: PM Modi

    அடுத்த செய்தி