ஹோம் /நியூஸ் /இந்தியா /

அனைவருக்கும் இணைய சேவை என்பதே அரசின் நோக்கம்... 5 ஜி சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

அனைவருக்கும் இணைய சேவை என்பதே அரசின் நோக்கம்... 5 ஜி சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

5ஜி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

5ஜி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் அனைவருக்கும் இணைய சேவை என்பதே அரசின் நோக்கம் என 5 ஜி சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  இந்தியாவில் முதல் கட்டமாக ஐந்தாம் தலைமுறை என்ற 5ஜி தகவல் தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 5ஜி சேவை, முதல் கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

  டெல்லி பிரகதி மைதானத்தில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 5 ஜி தொடர்பான தொழில்நுட்பங்களை பிரதமர் ஆய்வு செய்தார். அதன் பின்னர், சென்னை உள்ளிட்ட 13 முன்னணி நகரங்களில் 5ஜி சேவைகளை தொடங்கிவைத்தார்.

  தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவி ஒருவருடன் ஹாலோகிராம் முறையில் பிரதமர் மோடி உரையாடினார். இதேபோன்று டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுடனும் ஹாலோகிராம் முறையில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "2 ஜி , 3ஜி, 4ஜி காலகட்டங்களில் இந்தியா தொழில்நுட்பத்திற்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருந்தது.

  ஆனால் 5ஜி மூலம் இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது. இன்று 130 கோடி இந்தியர்கள் 5ஜி பரிசை பெறுகின்றனர். 5ஜி சேவையின் மூலம் இந்தியாவின் தொலைதூர கிராமத்தையும் இணைக்க முடியும். கிராமப்புற மாணவர்களும் இனி ஆன்லைன் கல்வி கற்க முடியும். இது இந்தியாவின் தசாப்தம் மட்டும் அல்ல. இந்தியாவின் நூற்றாண்டாகும். அனைவருக்கும் இணைய சேவை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

  இதையும் படிங்க: 2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை - ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

  தகவல் தொலைத்தொடர்பு துறையில் அரசு 4 தூண்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. முதலாவதாக கருவியின் விலை, இரண்டாவதாக டிஜிட்டல் கனெக்டிவிட்டி, மூன்றாவதாக டேட்டா கட்டணம், நான்காவதாக அனைவருக்கும் இணைய சேவை என்ற நோக்கில் டிஜிட்டலுக்கு முன்னுரிமை. இந்த நோக்கங்களை உள்ளடக்கி 5ஜி சேவை நாட்டில் தொலைத்தொடர்பு புரட்சியை ஏற்படுத்தும்" என பிரதமர் தெரிவித்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: 5G technology, PM Modi