Home /News /national /

“திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க, நடைமுறைக்கு ஏற்றவை“ - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

“திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க, நடைமுறைக்கு ஏற்றவை“ - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கடந்த ஆண்டு வள்ளுவர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்திருந்த மோடி, இந்தியா முழுவதும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி வள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க நடைமுறைக்கு ஏற்றவை என்று கூறியுள்ளார்.

    நாடு கடந்து வாழும் தமிழ்ரகளால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

    நேற்று பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து தை மாதம் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது

    Also read... வேகமெடுக்கும் ஒமைக்ரான்: எச்சரிக்கையாக இருங்கள்.. பீதி அடையத் தேவையில்லை: பிரதமர் மோடி 

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன என்று கூறியுள்ளார். அத்துடன் கடந்த ஆண்டு அவர் எடுத்த வள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் வீடியோ காட்சியையும் மோடி பதிவிட்டுள்ளார்.



    கடந்த ஆண்டு வள்ளுவர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்திருந்த மோடி, இந்தியா முழுவதும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.





    இதேபோன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Also Read : உத்தர பிரதேசத்தில் பாஜகவை விட்டு விலகும் கட்சியினர்...!
    Published by:Musthak
    First published:

    Tags: PM Modi, Thiruvallur

    அடுத்த செய்தி