Home /News /national /

ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!

ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் எல்லைப் பகுதிகளில், ஒரு லட்சம், புதிய என்சிசி மாணவர்களை உருவாக்கியுள்ளோம் என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் எல்லைப் பகுதிகளில், ஒரு லட்சம், புதிய என்சிசி மாணவர்களை உருவாக்கியுள்ளோம் என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் எல்லைப் பகுதிகளில், ஒரு லட்சம், புதிய என்சிசி மாணவர்களை உருவாக்கியுள்ளோம் என்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    என்சிசி நாட்டுக்கு செய்துவரும் பங்களிப்பை பாராட்டி பேசிய பிரதமர் மோடி, எல்லை பகுதிகளில் ஒரு லட்சத்திற்கு மேலான புதிய மாணவர்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், "என்சிசியில் நான் பெற்ற பயிற்சியும், இங்கு நான் கற்றுக்கொண்ட விஷயங்களும் எனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எனக்கு பெரும் பலத்தை அளித்துள்ளன. ஒரு காலத்தில் நானும் என்சிசியின் தீவிர உறுப்பினராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.சமீபத்தில், என்சிசி முன்னாள் மாணவர் அட்டையையும் பெற்றிருந்தேன்.

    நாடு சுதந்திரம் அடைந்த அமிர்த மஹோத்சவ் விழாவைக் கொண்டாடி வருகிறது. ஒரு இளம் நாடு இப்படி ஒரு வரலாற்று விழாவுக்கு சாட்சியாக மாறும்போது, ​​அதன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உற்சாகம் இருக்கிறது. அது இன்றும் இந்த மண்ணில் தெரிகிறது. இது இந்தியாவின் இளைஞர் சக்தியின் தொலைநோக்கு பார்வையாகும். இது நமது தீர்மானங்களை நிறைவேற்றும்.

    மேலும் படிக்க: மும்பை சேரி டூ மைக்ரோசாப்ட்... பெண்ணின் தன்னம்பிக்கை பயணம்.. வைரலாகும் வாழ்க்கை கதை!

    இன்று, நாடு புதிய தீர்மானங்களுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, ​​நாட்டில் தேசிய மாணவர் படையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதற்காக, நாட்டில் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் எல்லைப் பகுதிகளில், ஒரு லட்சம், புதிய என்சிசி மாணவர்களை உருவாக்கியுள்ளோம்" என்றார்.

    குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தேசிய மாணவர் படையின் பேரணி அனைத்து ஆண்டும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும். அந்த வகையில், டெல்லியில் இன்று என்சிசி படையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, என்சிசி படையினரின் திறமைகளை பார்வையிட்டதோடு, அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    நிகழ்ச்சியில் என்சிசி வீரர்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ பீரங்கிகள் அணிவகுப்பு, பாரசூட் சாகசங்கள் இடம் பெற்றன. தொடர்ந்து சிறந்த வீரர்களுக்கு பதங்கங்களையும், பரிசுகளையும் மோடி வழங்கினார்.

    Also read:  Wine என்பது மது கிடையாது - சூப்பர் மார்க்கெட்டில் வைன் விற்பனை நடவடிக்கையை நியாயப்படுத்தும் சஞ்சய் ராவத்!!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Modi, PM Modi

    அடுத்த செய்தி