Home /News /national /

புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள்.. மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு

புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள்.. மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்த மாத மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவசர நிலை குறித்தும், புதுச்சேரி இளைஞர்களின் தூய்மை பணி குறித்தும் பேசினார்.

  மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரையாடுவது வழக்கம். அந்தவகையில், இந்த மாத மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவசர நிலை குறித்தும், புதுச்சேரி இளைஞர்களின் தூய்மை பணி குறித்தும் பேசினார்.

  நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'பல ஆண்டுகள் முன்பாக 1975ஆம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில் தான் எமர்ஜன்சி எனப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம், தேசத்தின் குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் படி, அனைத்து இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்குமான உரிமை கூட பறிக்கப்பட்டது. அந்தக் காலத்தில், இந்தியாவில் மக்களாட்சியை காலில் போட்டு மிதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் நீதிமன்றங்கள், அனைத்து சட்ட அமைப்புகள், பத்திரிக்கைகள், என அனைத்தின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

  தணிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்றால், அனுமதி பெறாமல் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது என்ற நிலைமை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அப்போது புகழ்பெற்ற பாடகர் கிஷோர் குமார் அவர்கள், அரசுக்கு வெண்சாமரம் வீசிப் புகழ்ந்துபாட மறுத்தார் என்பதால், அவர் மீது தடை விதிக்கப்பட்டது. வானொலியில் அவர் நுழைவிற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பல முயற்சிகள், ஆயிரக்கணக்கான கைதுகள், லட்சக்கணக்கான மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளுக்குப் பிறகும் நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் மீதிருந்த நம்பிக்கை சற்றுக்கூட விலகவில்லை.

  இன்று, நாடு தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டினை, அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வரும் வேளையில், அவசரநிலையின் போது நிலவிய பயங்கரமான சூழ்நிலையை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது. இனிவரும் தலைமுறையினரும் மறந்து விடக்கூடாது'என்றார்.

  தொடர்ந்து அவர், 'புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய சுயவுதவி அமைப்புகள் வாயிலாகத் தொடங்கி இருக்கிறார்கள். புதுச்சேரி கடலோரப் பகுதி. அங்கிருக்கும் கடற்கரைகளையும், கடலையும் கண்டுகளிக்க மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள். ஆனால் புதுச்சேரியின் கடற்கரையிலும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் மாசு அதிகரித்துக் கொண்டிருந்தது. தங்களுடைய கடல் பகுதியில், கடல் கரைகளில், சுற்றுச்சூழலைப் பராமரிக்க, இந்தப் பகுதி மக்கள் ‘Recycling for Life’ வாழ்க்கைக்கான மறுசுழற்சி என்ற இயக்கத்தைத் தொடக்கினார்கள்.

  இதையும் படிங்க: மருந்து ஆய்வாளர் வீட்டில் ரூ.100ல் இருந்து ரூ.2000 வரை கட்டுக்காட்டாக பணம்.. அதிர்ச்சியில் உறைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்

  இன்று புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில், ஆயிரக்கணக்கான கிலோ குப்பைகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்டு, பகுக்கப்படுகிறது. இவற்றில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது, பிற பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு ஈடுபடுத்தப்படுகிறது. இதைப் போன்ற முயற்சிகள் உத்வேகம் அளிப்பவையாக இருப்பதோடு, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்கு எதிராக இந்தியா செயல்படுத்தி வரும் இயக்கத்திற்கு வேகத்தை கூட்டுகின்றது' எனப் பாராட்டினார்.
  Published by:Kannan V
  First published:

  Tags: PM Modi, Pudhucherry

  அடுத்த செய்தி