ஹோம் /நியூஸ் /இந்தியா /

கர்நாடகா பொதுக்கூட்டம் : மேடையிலேயே உற்சாகமாக ட்ரம்ஸ் இசைத்து அசத்திய பிரதமர் மோடி!

கர்நாடகா பொதுக்கூட்டம் : மேடையிலேயே உற்சாகமாக ட்ரம்ஸ் இசைத்து அசத்திய பிரதமர் மோடி!

ட்ரம்ஸ் வாசித்து அசத்திய மோடி

ட்ரம்ஸ் வாசித்து அசத்திய மோடி

கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்ஸ் இசைத்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் வளர்ச்சிக்கான அரசியலே தங்களுக்கு முக்கியம் என்றும் வாக்கு வங்கி அரசியல் அல்ல எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம்  யாத்கிரி மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். குடிநீர், பாசனம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 11 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்திருப்பதாகக் கூறினார். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது, வெறும் 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்ததாக தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள், சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக வாக்கு வங்கி அரசியலை ஊக்குவித்ததாகவும் மோடி விமர்சித்தார்.

முன்னதாக  அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்ஸ் இசைத்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். அதேநேரம் பிரதமர் மோடி ட்ரம்ஸ்  வாசிக்கும் போது, மக்கள் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் பகவந்த் குபா, மாநில  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Karnataka, Modi