ஜம்மு- காஷ்மீரில், ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹந்த்வாராவில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கும் - ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. சுமார் எட்டு மணிநேரத்திற்கும் மேல் நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவத் தளபதி உள்ளிட்ட நான்கு வீரர்கள் மற்றும் காஷ்மீர் உதவி ஆய்வாளர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர்.
மேலும் இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கலில், உயிர்நீத்த வீரர்களின் தியாகமும், வீரமும் மறக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை காப்பாற்றுவதற்காக ஓய்வின்றி போராடிய வீரர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Tributes to our courageous soldiers and security personnel martyred in Handwara. Their valour and sacrifice will never be forgotten. They served the nation with utmost dedication and worked tirelessly to protect our citizens. Condolences to their families and friends.
— Narendra Modi (@narendramodi) May 3, 2020
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, PM Modi