ஆகஸ்ட் 14ம் தேதியை பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக இந்திய அரசு அறிவிப்பு

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை

சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

 • Share this:
  இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த துயரங்களை நினைவு கூரும் விதமாக ஆகஸ்ட் 14ம் தேதியை பிரிவினை கொடுமைகள்நினைவு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

  1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றது. இந்த பிரிவினைக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் மிகப்பெரிய கலவரங்களும், போராட்டங்களும் வெடித்தன. கலவரத்தால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, பலர் தங்களது உடைமைகளை இழந்து, இடம் பெயர்ந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட கலவரம் மக்களிடையே இன்றளவும் ஆறாத துயரமாக உள்ளது. இந்நிலையில் பிரிவினையின்போது இந்திய மக்கள் சந்தித்த வேதனைகள் மற்றும் துன்பங்களை தற்போதைய மற்றும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் நினைவுகூரும் விதமாக ஆகஸ்ட் 14 -ஐ பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க: தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.... சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் வேண்டுகோள்


  இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி  தனது ட்விட்டர் பதிவில் "லட்சக்கணக்கான  சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் புலம் பெயரவும், அகதிகளாகவும், அனாதைகளாகவும் ஆக காரணமான பிரிவினை வன்முறையில், பலர்  உயிர்களையும் இழந்தனர். நம் நாட்டு மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

  மேலும், சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   
  Published by:Murugesh M
  First published: