Home /News /national /

Headlines Today : பிரதமர் மோடி மைசூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார் - தலைப்புச் செய்திகள் (ஜூன் 21, 2022)

Headlines Today : பிரதமர் மோடி மைசூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார் - தலைப்புச் செய்திகள் (ஜூன் 21, 2022)

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Headlines Today : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவருடன் 15,000 பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

  தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  சிறுவாணி அணையிலிருந்து கோவையின் குடிநீருக்கு கூடுதல் நீரை கேரள அரசு திறந்துவிட்ட நிலையில், இரு மாநிலங்களும் இணைந்து வளர்ச்சியை உறுதிசெய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறியுள்ள நிலையில், அதனை தள்ளி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

  அதிமுக பொதுக்குழுவுக்கான தீர்மான தயாரிப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

  எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

  ஸ்டெர்லைட் ஆலையை எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

  ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், உள்ளூர் மக்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  பொறியியல் படிப்புகளுக்கு முதல் நாளில் 18,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய இன்று கூடுகிறது பாஜக ஆட்சிமன்றக் குழு. 17 எதிர்க்கட்சிகள் இணைந்து தனியாக ஆலோசனை நடத்துகின்றன.

  அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிரதமர் நரேந்திர மோடியுடன் முப்படைத் தலைமை தளபதிகள் இன்று சந்திப்பு. அக்னிபத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

  டெல்லி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி. வீட்டிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

  வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

  Must Read : அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - தனித் தீர்மானம் இன்று இறுதி செய்ய வாய்ப்பு

  இமாச்சல பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

  இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, PM Modi, Today news, Top News, Yoga day

  அடுத்த செய்தி