தாயும் மகனும் ஜாமினில் இருக்கிறார்கள்! - சாடும் மோடி

'ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா? எங்கள் ஆட்சியிலா நேஷனல் ஹெரால்டு வழக்கு நடந்தது?'

தாயும் மகனும் ஜாமினில் இருக்கிறார்கள்! - சாடும் மோடி
மோடி
  • News18
  • Last Updated: April 9, 2019, 7:22 PM IST
  • Share this:
ஊழல் குறித்தும் அதில் காங்கிரஸின் பங்கு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

நியூஸ் 18 உடனான பிரத்யேக நேர்காணலில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது ஊழல் குறித்துப் பேசியவர், “நான் காங்கிரஸ் மீது ஒருநாளும் ஊழல் குறித்துத் தாக்கிப் பேசியதே இல்லை. நம்மிடையே ஊழல் என்னும் பெரும் பிரச்னை இருக்கிறது. போபாலில் நடந்தது போலத்தான். குற்றம் சுமத்தப்பட்ட பர்ஷத் நாத் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அவை முக்கியமல்ல.

ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா? எங்கள் ஆட்சியிலா நேஷனல் ஹெரால்டு வழக்கு நடந்தது? எங்கள் ஆட்சிக் காலத்திலா லாலு யாதவ் வழக்கு நடந்தது? இவையெல்லாம் தவிர்க்கப்பட்டு மூலையில் கிடத்தப்பட்டதோ அவற்றையெல்லாம் நாங்கள் வெளியில் கொண்டு வர நினைத்தோம். சட்டத்தின் அடிப்படையிலேயே அவை அணுகப்பட வேண்டும் என்றிருந்தோம்.


தவறு செய்தவர்கள்தான் ஜாமின் கேட்பார்கள். காங்கிரஸ் மீது ஊழல் குறித்து நான் சொல்ல என்ன இருக்கிறது? தவறு செய்துள்ளார்கள். அதனால் தாய் - மகன் ஒருவரும் தற்போது ஜாமினில் வெளியில் இருக்கிறார்கள்.மேலும் பார்க்க: உ.பி.யில் இந்த முறை பாஜகவுக்கு 10 இடம்தான் கிடைக்கும் - பத்திரிகையாளர் எம்.சி. ராஜன்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading