Home /News /national /

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் : பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் : பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து

ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தனது, 72வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது தலைசிறந்த மற்றும் புதுமையான நடிப்பால் இன்னும் ஏராளமான மக்களை ரஜினிகாந்த் ஈர்க்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் ரஜினிகாந்துக்கு ஆரோக்கியமான, நீண்ட வாழ்வை வழங்க பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், ''உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    Also Read : ரஜினிகாந்த் என்னும் மகா கலைஞன்

    72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கும்; நல்ல உடல் நலத்துடன் திகழவும் விழைகிறேன்'' என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறப்பவரம், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷன், தாதா சாகெப் பால்கே விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவரும், சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறையருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்த்து உயர்த்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்' என்று கூறியுள்ளார்.

    Also Read : தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 'ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Modi, Rajini Kanth

    அடுத்த செய்தி