’பாகிஸ்தானுடன் சீனா மட்டுமே உள்ளது...!’- பிரதமர் மோடி

சர்வதேச விவகாரங்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முடிவில் இருக்கும்.

’பாகிஸ்தானுடன் சீனா மட்டுமே உள்ளது...!’- பிரதமர் மோடி
மோடி
  • News18
  • Last Updated: April 9, 2019, 7:24 PM IST
  • Share this:
”பாகிஸ்தானுடன் சீனா மட்டுமே உள்ளது. ஆனால், உலகமே இந்தியாவுக்குத்தான் ஆதரவு அளிக்கிறது” என நியூஸ் 18 உடனான பிரத்யேக நேர்காணலில் பிரதமர் மோடி பேசினார்.

மோடி பேசுகையில், “சீனா உடன் இந்தியாவுக்கு அரசியல் ரீதியான உறவு உள்ளது. சீனாவுக்கும் நமக்கும் இடையே பரஸ்பரம் பொருளாதார முதலீடுகள் உள்ளன.

நமது தலைவர்கள் சீனாவுக்குச் செல்வதும் சீனத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருவதும் வழக்கம். ஆனாலும், இந்த இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் தீராப் பிரச்னையாக எல்லைப் பிரச்னை உள்ளது.


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பார்வையும் புரிதலும் வெவ்வேறு. இருதரப்பிலும் வேற்றுமைகள் இருந்தாலும் இந்த வேற்றுமைகளால் சச்சரவுகள் கூடாது என்ற புரிதல் உள்ளது. ஆனாலும், பிரச்னைகள் எழும் சூழலில் பேச்சுவார்த்தை மேற்கொள்வோம்.

சர்வதேச விவகாரங்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முடிவில் இருக்கும். சில நேரங்களில் நாம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருப்போம். சில நேரங்களில் இஸ்ரேலின் பக்கம் நமது ஆதரவு இருக்கும். தேசியத்தின் நலன் கருதி ஒவ்வொரு நாடுகளும் முடிவெடுக்கும். ஒரு காலகட்டத்தில் இந்தியாவுக்கு ரஷ்யாவின் ஆதரவு மட்டுமே இருந்தது.

இதர நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்குத் தான் ஆதரவு அளித்து வந்தன. ஆனால், இன்றைய நிலைமை வேறு. தற்போது சர்வதேச அளவில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. இதர நாடுகள் பலவும் இந்தியாவுக்குத் தான் ஆதரவு அளிக்கின்றன. இந்த மாறுதல்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது நமது வெற்றிக்கான ஆதாரம்” என்றார்.
First published: April 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்