Home /News /national /

"சிந்தனை எல்லாம் அங்கேயே உள்ளது” - கொச்சிக்கு பதிலாக கராச்சி என்று கூறிய மோடி

"சிந்தனை எல்லாம் அங்கேயே உள்ளது” - கொச்சிக்கு பதிலாக கராச்சி என்று கூறிய மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

“என் சிந்தனை எல்லாம் தற்போது அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது. அதனால் தான் கராச்சி என கூறிவிட்டேன்” என்று மோடி தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மோடி, ஜாம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொச்சிக்கு பதிலாக கராச்சி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அகமதாபாத் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து ஜாம்நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

    அப்போது, “ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். ஜாம்நகர் மக்களான நீங்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு செல்லும் போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் மீண்டும் ஜாம்நகருக்கு வரவேண்டியது இல்லை.

    போபாலில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும்” என்று மோடி பேசினார்.



    இதனைக் கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட மோடி, “நான் கராச்சியை குறிப்பிடவில்லை. கேரள மாநிலம் கொச்சியை தான் குறிப்பிட்டேன்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், “என் சிந்தனை எல்லாம் தற்போது அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது. அதனால் தான் கராச்சி என கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.

    Also See..

    Published by:Sankar
    First published:

    Tags: Lok Sabha Election 2019, PM Modi

    அடுத்த செய்தி