Home /News /national /

“வாரிசு அரசியலை பாஜகவுக்குள் அனுமதிக்க மாட்டேன்“ - பிரதமர் மோடி

“வாரிசு அரசியலை பாஜகவுக்குள் அனுமதிக்க மாட்டேன்“ - பிரதமர் மோடி

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் அதற்கு நான்தான் காரணம். - மோடி

    வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அதனை பாஜகவுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தனது குறுக்கீடு காரணமாகத்தான் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு சீட்டு கிடைக்கவில்லை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது- ஆபரேஷன் கங்கா திட்டத்தின் அடிப்படையில் உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மத்திய அரசு வெற்றிகரமாக மீட்டது. மற்ற நாடுகளை விட இந்தியா மீட்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டது.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் அதற்கு நான்தான் காரணம். எனது தலையீடு காரணமாகத்தான் வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

    இதையும் படிங்க - 'தேர்தலில் தோல்வி அடையும் கலையை காங்கிரசிடம் கற்றுக் கொள்ளலாம்' : பாஜக அமைச்சர் அனுராக் தாகூர்

    இதுபோன்ற பழக்கம் பாஜகவில் இருக்கக் கூடாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு எனது பாராட்டுக்கள். இதுபோன்ற படங்கள் அடிக்கடி வெளியாக வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகளைப் பெற்ற பூத்களை கண்டறிந்து, அங்கு வாக்குகளை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். விழாவின்போது, உக்ரைனில் நடந்த மீட்பு பணிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க - hijab row: அரசின் சீருடை விதிகளுக்கு அனைவரும் உட்பட்டவர்களே - ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022, Modi

    அடுத்த செய்தி