• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • EXCLUSIVE ஆயுதப்படைகளை பாதுகாக்கும் திறன் அரசிடம் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

EXCLUSIVE ஆயுதப்படைகளை பாதுகாக்கும் திறன் அரசிடம் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

மோடி

மோடி

'ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது என்பது நமது ராணுவ வீரர்களை நாமே பலியிடுவதுபோல் ஆகிவிடும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

நியூஸ் 18 தொலைக்காட்சி உடன் இரண்டாம் முறையாக பிரத்யேக நேர்காணலில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், “முதலில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் செயல்பாட்டில் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நாம் அருணாச்சலப்பிரதேசத்தில் செய்தது போல் செய்ய வேண்டும்.

முதலில் சில மாவட்டங்களிலிருந்து மட்டுமே நாம் நீக்கினோம். 1980-ம் ஆண்டுக்குப் பின்னர் இத்தகைய நடவடிக்கையை நாம் தான் முதலில் மேற்கொண்டுள்ளோம். ஆனாலும், சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருந்தது. ஒரு அரசுக்கு தன்னுடைய ஆயுதப்படையைப் பாதுகாக்கும் திறன் வேண்டும்.

அரசுக்கு இந்தத் திறன் இருந்தால்தான் நமக்கு எதிர்த்துப் போராடாவதற்கான மன உறுதி கிடைக்கும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது என்பது நமது ராணுவ வீரர்களை நாமே பலியிடுவதுபோல் ஆகிவிடும். நமது வீரர்களுக்கு அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்” என்றார்.


Also Read:

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெறும் அறிவிப்பு... பா.ஜ.க வெளியிட்டது தீர்மானம்!

‘அரசின் பொறுப்புக்கு சாட்சியாக உள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை’ - பிரதமர் மோடி

 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: