இந்தியா - நேபாளம் இடையே குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்!

பிரதமர் மோடியும், நேபாளத்தில் இருந்து அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியும், காணொலி மூலமாக இணைந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

news18
Updated: September 10, 2019, 5:46 PM IST
இந்தியா - நேபாளம் இடையே குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்!
பிரதமர் மோடி
news18
Updated: September 10, 2019, 5:46 PM IST
இந்தியா - நேபாளம் இடையே குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி இணைந்து தொடங்கி வைத்தனர்.

பீகார் மாநிலம் மோதிஹாரில் இருந்து நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதி வரையிலான 68.9 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய் மூலமாக பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்ல ஒப்பந்தம் போடப்பட்டது.

இதற்கான பணிகள் முடிவடைந்ததை அடுத்து தொடக்க விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடியும், நேபாளத்தில் இருந்து அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியும், காணொலி மூலமாக இணைந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தெற்காசியாவில் குழாய் மூலம் இருநாடுகளுக்கு இடையே எரிபொருள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல்முறை என்றார். நேபாள அரசின் முழு ஒத்துழைப்பால் இது சாத்தியமானதாகவும் அவர் தெரிவித்தார்.

Also see...

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...