ஹோம் /நியூஸ் /இந்தியா /

அந்தமானின் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயரை சூட்டிய பிரதமர் மோடி!

அந்தமானின் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயரை சூட்டிய பிரதமர் மோடி!

அந்தமான் தீவுகள்

அந்தமான் தீவுகள்

நேதாஜி பிறந்தநாளில் அவரையும் நாட்டின் ராணுவ வீரர்களையும் பெருமை படுத்தும் விதமாக அந்தமானில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு 21 ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின் 126ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நேதாஜி பிறந்தநாளை பராக்ரம் திவஸ் என்ற பெயரில் அரசு நாடு முழுவதும் கொண்டாடுகிறது.

நேதாஜி பிறந்தநாளில் அவரையும் நாட்டின் ராணுவ வீரர்களையும் பெருமை படுத்தும் விதமாக அந்தமானில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு 21 ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ராணுவத்தின் மிக உயரிய விருதானது பரம்வீர் சக்ரா விருது. போர்களத்தில் மிக தீரமான சாகசத்தை செய்தவர்களை பெருமைப்படுத்தும் விதமா இந்திய அரசு இந்த பரம்வீர் சக்ரா விருதை வழங்குகிறது. இந்த விருதை இதுவரை 21 ராணுவ வீரர்கள் பெற்றுள்ளனர்.

பரம்வீர் சக்ரா விருது பெற்ற இந்த 21 ராணுவ வீரர்களின் பெயரைத் தான் அந்தமானின் தீவுகளுக்கு அரசு சூட்டியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்று தலைமை தாங்கினார். தீவுகளுக்கு 21 வீரர்களின் பெயரை சூட்டிய உரையாற்றிய பிரதமர் மோடி, "நாட்டின் மூவர்னக்கொடி முதல் முதலாக அந்தமானில் தான் ஏற்றப்பட்டது. சுந்திர இந்தியாவின் முதல் அரசும் அந்தமானில்தான் உருவானது. நேதாஜி பிறந்த இந்த நாளில் நாட்டின் உண்மையான ஹீரோக்களுக்கு பெருமை தரும் விதமாக அவர்களின் பெயர்களை அந்தமான் தீவுகளுக்கு சூட்டியுள்ளோம்" என்றார்.

2018ஆம் ஆண்டில் அந்தமான் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள ரோல் தீவின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என மாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் அவருக்கு தேசிய நினைவகம் ஒன்று கட்டப்படுகிறது. அதன் மாதிரியையும் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

First published:

Tags: Andaman And Nicobar Islands S33p01, Army men, Indian army, PM Modi