எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் பணிவாக இருங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி

இந்த நாட்டுக்காக நாம் உழைக்க வேண்டும். நம் அனைத்து பணிகளிலும், நாட்டின் நன்மை குறித்த அக்கறை இருக்க வேண்டும்.

 • Share this:
  மத்திய அரசின் பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள குழந்தைகளுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று உரையாடினார்.

  புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை, வீரதீர செயல்கள், கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறைகளில் சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் அமைப்பின் சார்பில், பால சக்தி புரஸ்கார் விருதுகளை, மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.கடந்த ஆண்டுக்கான பால சக்தி புரஸ்கார் விருதுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, 32 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  இவர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று உரையாடினார். அப்போது குழந்தைகளுக்கு 3 அறிவுரைகளை வழங்கினார் மோடி:

  நீங்கள் அனைவரும் மூன்று உறுதி மொழியினை ஏற்க வேண்டும். முதலாவது, உங்கள் செயல்களில் வேகம் குறையாமல், எப்போதும் நிலையான தன்மையை பின்பற்ற வேண்டும்.

  இரண்டாவது, இந்த நாட்டுக்காக நாம் உழைக்க வேண்டும். நம் அனைத்து பணிகளிலும், நாட்டின் நன்மை குறித்த அக்கறை இருக்க வேண்டும். அப்படியிருந்தால், நாம் செய்யும் பணிகள், பெரிய உயரத்தை தொடும்.மூன்றாவது, எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், பணிவாக இருக்க பழக வேண்டும். இந்த குணம் இருந்தால், மற்றவர்களும் நம்முடன் சேர்ந்து, நம் வெற்றியை கொண்டாடுவர், என்று அறிவுரை வழங்கினார் மோடி.
  Published by:Muthukumar
  First published: