பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அகமதாபாத் விரைகிறார்.
இந்நிலையில், ஹீராபென் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அஞ்சலி குறிப்புகளை பதிவிட்டு வருகின்றனர். அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடியின் தாய் ஹீரா பாவின் மறைவு செய்து பெரும் கவலையை தருகிறது. தாய் தான் ஒரு நபரின் முதல் நண்பர், முதல் ஆசிரியர். உலகின் மிகப் பெரிய வலி என்பது தாயாரின் மறைவு தான்.
குடும்பத்தை வளர்த்து வழிநடத்த தாய் ஹீரா பென் சந்தித்த போராட்டங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. அவரின் தியாக வாழ்க்கை என்றும் நினைவில் நிலைத்திருக்கும். இந்த சோக காலத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரின் குடும்பத்துடன் ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும். ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.
हीरा बा ने जिन संघर्षों का सामना करते हुए परिवार का पालन पोषण किया वो सभी के लिए एक आदर्श हैं। उनका त्यागपूर्ण तपस्वी जीवन सदा हमारी स्मृति में रहेगा। पूरा देश दुःख की इस घड़ी में प्रधानमंत्री मोदी जी व उनके परिवार के साथ खड़ा है। करोड़ों लोगों की प्रार्थना आपके साथ हैं। ॐ शांति
— Amit Shah (@AmitShah) December 30, 2022
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், "ஹீரா பா, அவர்களின் மறைவு குறித்து நான் மிகுந்த வருத்தமடைகிறேன். தாயின் மரணம் ஒருவரது வாழ்வில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. இந்த துயரமான நேரத்தில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் எல் முருகன், நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாடேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அஞ்சலி பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Heeraben Modi, PM Modi, PM Narendra Modi, Rajnath singh