ஹோம் /நியூஸ் /இந்தியா /

துரத்தும் வறுமை.. விடாமல் படிக்கும் பழங்குடி சிறுவர்கள்.. தேடிச்சென்று சந்தித்த பிரதமர் மோடி!

துரத்தும் வறுமை.. விடாமல் படிக்கும் பழங்குடி சிறுவர்கள்.. தேடிச்சென்று சந்தித்த பிரதமர் மோடி!

மோடி சந்தித்த பழங்குடியின சிறுவர்கள்

மோடி சந்தித்த பழங்குடியின சிறுவர்கள்

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், சகோதரர்கள் கல்வியை விட கூடாது என்று உறுதியில் வேலைகளுக்கு இடையில் பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேத்ராங்கில் வசித்து வரும் இரண்டு பழங்குடி சிறுவர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

நேத்ராங்கில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த இரண்டு பழங்குடியினக் குழந்தைகளைச் சந்திக்க வேண்டியிருந்ததால், சற்று தாமதமாக வந்ததாகக் கூறினார்.

குஜராத் பழங்குடியின சமீகத்தை சேர்ந்த அவி (14), ஜெய் (11) ஆகிய சகோதரர்கள் தாய் தந்தை அற்று தனித்து வளர்ந்து வருகின்றனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த அன்றிலிருந்து ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மாதம் 5 ஆயிரம் மொபைல் பில் கட்டியிருப்பீர்கள்: பிரதமர் மோடி பேச்சு

பெற்றோரை இழந்த குழந்தைகள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள கூலி வேலை செய்து வந்தனர். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், சகோதரர்கள் கல்வியை விட கூடாது என்று உறுதியில் வேலைகளுக்கு இடையில் பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அவி 9ம் வகுப்பும், ஜெய் 6ம் வகுப்பும் படிக்கிறார்.

அவர்களின் கதையை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டித்தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அவரது நேத்ராங் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த இரு சகோதரர்களைச் சந்தித்து பேசினார்.

பிரதமரைச் சந்தித்த பிறகு, தாங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், பிரதமர் மோடியின் ஆதரவிற்கு நன்றி என்றும் சகோதரர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : ஜம்மு-காஷ்மீரில் காரின் வடிவத்தை ஸ்டைலாக மாற்றியவருக்கு சிறை தண்டனை

மேலும் அவி, “மோடி அவர்கள் நான் என்ன ஆக வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் என்ஜினீயர் ஆக வேண்டும் என்று சொன்னேன். எங்கள் கல்விக்கான பொறுப்பை நானே ஏற்பேன் என்று பிரதமர் உறுதியளித்தார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.ஜெய் தனக்கும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்றார்.

மேலும் அரசு சார்பில், அவர்களது வீட்டில் டிவி, கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களது படிப்பு செலவை மோடி அவர்களே ஏற்பதாக உறுதி அளித்துள்ளார்.

First published:

Tags: Gujarat, Narendra Modi, PM Narendra Modi