Home /News /national /

சமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

சமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சமூக வலைத்தளங்களில் நாட்டுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :
    வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமர் நரேந்திரமோடி இன்று 67வது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரையாற்றினார்.

    கார்கில் போரில் இந்தியா சிறப்பான வெற்றியை பெற்ற இன்றைய தினத்தை சமூக வலைத்தளங்களில் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டார்.

    கார்கில் போரையும், அது நடந்த விதத்தையும் இந்தியா என்றைக்குமே மறக்காது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவை கைப்பற்றலாம் என நினைத்து திட்டம் போட்ட பாகிஸ்தான் வீண் சாகசங்களை செய்து தோற்றதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் கார்கில் இந்தியா மிக சிறப்பான வெற்றியை பெற்றதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்களில் நாட்டுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

    கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்த அவர், கொரோனாவால் இறந்தவர்களின் சதவிகிதம் மற்ற நாடுகளை விட மிக மிக குறைவாக உள்ளது என்றும் கூறினார்.

    ஆனால், கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், இந்தியா அதனை சிறப்பாக கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார். பொருளாதார சரிப்படுத்த வேண்டிய சூழலில் உள்ள இந்தியாவை நோக்கி முதலீடுகள் வர தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

    இதனிடையே மனதில் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், நாமக்கல்லை சேர்ந்த கனிகா என்ற மாணவியுடன் பேசினார். அப்போது மாணவி கனிகா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி, மாணவியின் மருத்துவர் கனவு, குடும்ப சூழல் உள்ளிட்டவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Kargil War, Mann ki baat

    அடுத்த செய்தி