இன்றைய இளைஞர்கள் சாதி, பாலின பாகுபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை - பிரதமர் மோடி

Mann Ki Baat |

இன்றைய இளைஞர்கள் சாதி, பாலின பாகுபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: December 30, 2019, 7:54 AM IST
  • Share this:
இன்றைய இளைஞர்கள் சாதி, பாலின பாகுபாடுகளை, அராஜகத்தை ஏற்றுக்கொள்வதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி வழியாக பேசும், மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

இது 2019 -ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சி மட்டுமின்றி, 60வது மன் கி பாத் நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.


அப்போது, அடுத்த 3 நாட்களில் புத்தாண்டு பிறக்க உள்ளதை குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்தியாவில் உள்ள இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என தான் கருதுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய இளைஞர்கள் சாதியையோ, பாலின பாகுபாடுகளையோ, சார்பு தன்மையையோ, அராஜகத்தையோ ஏற்றுக்கொள்வதில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இளைஞர்கள் குறித்தான விவேகானந்தர் சிந்தனைகளை நினைவு கூர்ந்த பிரதமர், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் நினைவிடம் எழுப்பப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையும் குறிப்பிட்டார்.  இந்த ஆண்டு இளைஞர்கள் அனைவரும் ஒருமுறையேனும் விவேகானந்தர் பாறைக்கு சென்று வரவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.இளைஞர்கள், மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரித்த பொருட்களுக்கு ஊக்கம் அளித்து, உள்நாட்டு பொருட்களையே வாங்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த இரு நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் ஆக்கப்பூர்வமானதாக நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக அனைத்து எம்பிக்களையும் தான் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளையும், விவசாயத்தையும் கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர், பொங்கல் திருவிழாவின் இறுதி நாளை திருவள்ளுவர் தினமாக கொண்டாடும் பெருமை நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாள் எழுத்தாளரும், சிந்தனையாளருமான திருவள்ளுவருக்காக அர்ப்பணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்