"தண்ணீர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவே தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது” வானொலியில் பிரதமர் உரை

பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: June 30, 2019, 12:27 PM IST
  • Share this:
”தண்ணீர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவே தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது” என்று பிரதமர் மோடி மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றி வருகிறார். நாட்டில் நிலவும் பல பிரச்னைகள், சுவாரஸ்ய நிகழ்வுகள் என்று பல தரப்பட்ட விஷயங்களில் தனது கருத்துக்களை மோடி கூறுவார்.

கடந்த பிப்ரவரி மாதம் 53-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உங்களுடைய நல்லாசிகளின் துணையால், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் சக்தியுடன் மீண்டும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உங்களுடன் கலந்துரையாடுவேன் என தெரிவித்திருந்தார். மக்களவை தேர்தல், புதிய அரசு பதவியேற்கு ஆகிய காரணங்களினால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி நடக்கவில்லை.


இந்நிலையில், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், இன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பேசிவருகிறார்.

”கடந்த முறை மன்கிபாத்தில் பேசும் போது, மீண்டும் கலந்துரையாடுவேன் என்று மக்களிடம் கூறினேன். அதீத தன்னம்பிக்கை என்று பலரும் விமர்சித்தனர். ஆனால், மக்களை நான் நம்பினேன்” என்று மோடி பேசினார்.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தான் குகையில் தியானம் செய்ததை பலர் அரசியல் ரீதியிலாக விமர்சித்தனர். தண்ணீர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க ஜலசக்தி என்ற அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றும் மோடி குறிப்பிட்டார்.
First published: June 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading