பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்!

ஜம்மு காஷ்மீரில் 144 ஊரடங்கு உத்தரவும் இணைய சேவை முடக்கமும் அமலில் உள்ளது.

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்!
மோடி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: August 8, 2019, 7:21 PM IST
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8  மணி அளவில் உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் ஒரு மசோதாவை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களான ஓமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் எடுக்கப்பட்டு பின்னர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 144 ஊரடங்கு உத்தரவும் இணைய சேவை முடக்கமும் அமலில் உள்ளது. இத்தகைய பதற்ற நேரத்தில் சட்டப்பிரிவு நீக்கத்திற்கான காரணத்தை பிரதமர் இன்றைய உரையில் விளக்குவார் எனத் தெரிகிறது.


காஷ்மீர் விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரையில் மோடிவிளக்கம் அளிக்காமல் உள்ளார். அதனால், அகில இந்திய வானொலி மூலம் இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த உரையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றி பிரித்தது மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது ஆகியவை தொடர்பாக பிரதமர் மோடி மக்களிடம் விளக்குவார் எனத் தெரிகிறது.

இதற்கு முன்னதாகக் கடந்த மார்ச் 27-ம் தேதி மக்களவைத் தேர்தல் காலகட்டத்தில் விண்கலத்தைத் தாக்கும் A-Sat விண்கலம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக பிரதமர் வானொளி மூலம் மக்களிடம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பார்க்க: பைலட் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது...பாலகோட் வீரர்களுக்கும் கவுரவம் அளிக்க முடிவு!
First published: August 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்