ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்!

கிர்கிஸ்தானுக்கு பாகிஸ்தான் வான்பகுதி வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்லாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: June 13, 2019, 9:45 AM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்!
நரேந்திர மோடி
Web Desk | news18
Updated: June 13, 2019, 9:45 AM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக பிரதமர் மோடி இன்று கிர்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்ற பின் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க இருப்பதால், இரு நாட்டு உறவு புதிய உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கிர்கிஸ்தானுக்கு பாகிஸ்தான் வான்பகுதி வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்லாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see... பாதை மாறி போனவர்கள் திரும்பி வந்தால் உரிய மரியாதை கிடைக்கும்: செல்லூர் ராஜு

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...