சுஷ்மா மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

News18 Tamil
Updated: August 7, 2019, 7:42 AM IST
சுஷ்மா மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
News18 Tamil
Updated: August 7, 2019, 7:42 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுஷ்மா சுவராஜின் மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது சேவை இந்திய மக்களின் நினைவுகளில் நீங்காமல் கலந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.Loading...

இந்திய அரசியலின் மிகச்சிறப்பான அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  உலகில் உள்ள அனைத்து இந்தியர்களின் துயரத்தையும் துடைத்தவர் சுஷ்மா என குறிப்பிட்டுள்ளார் .


கட்சி பாகுபாடுகளை கடந்து அனைவருடனும் நட்பு பாராட்டிய சிறந்த தலைவர் என ராகுல் காந்தி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


ஒரு பெண்ணாக தனது பொதுவாழ்வில் உயரத்தை எட்டி, சிறப்பாக செயலாற்றியவர் சுஷ்மா சுவராஜ் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.


அதேபோல், ப.சிதம்பரம், தமிழிசை சவுந்தரராஜன், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...