ஹோம் /நியூஸ் /இந்தியா /

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

திட்டத்தை தொடங்கிவைத்த மோடி

திட்டத்தை தொடங்கிவைத்த மோடி

100 ஆண்டுகள் கண்டிராத பெருந்தொற்றை உலகம் தற்போது கண்டுள்ளதால், அதன் தாக்கமானது 100 நாள்களில் நீங்கி விடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கார் மேளா' எனப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை டெல்லியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

  மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன் முதல்கட்டமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

  நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "100 ஆண்டுகள் கண்டிராத பெருந்தொற்றை உலகம் தற்போது கண்டுள்ளது. இதன் தாக்கமானது 100 நாள்களில் நீங்கி விடாது. இதன் பின்விளைவுகள் மறைய காலம் எடுக்கத்தான் செய்யும். உலக அளவில் விலைவாசி உயர்வு, வேலையின்மை தலைதூக்கியுள்ளது. உலகின் முன்னேறிய பெரும் பொருளாதார நாடுகளே தவித்து வருகின்றன.

  உலக அளவில் நிலைமை தற்போது சரியாகத் தான் இல்லை. ஆனால், இந்தியா இதை எதிர்கொள்ள புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. நாட்டை காப்பாற்ற சில துணிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த சவாலான பணியை மக்களின் ஆசிர்வாதத்துடன் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

  இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை - ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்!

  இந்த புதிய திட்டத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், 38 மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிகளில் சேருவார்கள். இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தில் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மத்திய ஆயுதப்படை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பலவகை பணி செய்வோர் (எம்டிஎஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கான நியமிக்கப்படவுள்ளனர். வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்பு என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Government jobs, Jobs, PM Modi