ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூ.16ஆயிரம் கோடி! பாரத் பெயரில் யூரியா, டிஏபி! ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கிய பிரதமர்!

ரூ.16ஆயிரம் கோடி! பாரத் பெயரில் யூரியா, டிஏபி! ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கிய பிரதமர்!

ரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக 16 ஆயிரம் கோடி ரூபாயையும் பிரதமர் மோடி விடுவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, விவசாய பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கான, வேளாண் மையங்களையும் திறந்து வைத்தார்.

  டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2 நாட்கள் நடைபெறும் விவசாய சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மானிய விலையில் வழங்கப்படும் யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களை பாரத் என்ற பெயரில் சந்தைப்படுத்தும் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  இதையும் படிங்க: ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டம்.. அவரச மருத்துவ உதவிக்கு புக்கிங் செய்வது எப்படி?

  அத்துடன், விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வழங்க, 600 வேளாண் வள மையங்களையும் திறந்து வைத்தார்.

  ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  மேலும், விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக 16 ஆயிரம் கோடி ரூபாயையும் பிரதமர் மோடி விடுவித்தார். பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

  இதையும் படிங்க: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வீரியமான ஒமைக்ரான் வைரஸ் - அடுத்த அலை தொடங்கும் அபாயம்!?

  மேலும் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என 3 தவணைகளில் இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: National fertilizers, PM Kisan, PM Modi