Home /News /national /

பிரதமர் மோடி `தூய்மை சேவை’ திட்டத்தை தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி `தூய்மை சேவை’ திட்டத்தை தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு புது தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். இதற்காக நாடு முழுவதிலும் 18 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடி.


    இந்தப் புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, மகாத்மா காந்தியின் ‘தூய்மையான இந்தியா’ என்ற கனவை நிறைவேற்றுவதே இந்தத் திட்டத்தின் இலக்கு என்று கூறியுள்ளார். தூய்மையான இந்தியா உருவாக நாம் அனைவரும் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

    ‘இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான தூதுவர்கள், இந்தியாவில் நேர்மறை மாற்றத்தின் முன்னணியில் இளைஞர்கள் இருக்கிறார்கள்.  4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

    பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
    Published by:Saroja
    First published:

    Tags: Clean india, Gandhi, Narendra Modi

    அடுத்த செய்தி