வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி முலம் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். இதன்படி 74வது முறையாக இந்த மாதத்திற்கான நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகின் தொன்மையான தமிழ் மொழியை என்னால் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது என்று பேசினார். தமிழ் மொழி குறித்தும் தமிழின் பண்டைய இலக்கிய நூல்கள், திருவள்ளுவர், கனியன் பூங்குன்றனார் போன்ற தமிழ் புலவர்கள் குறித்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி பேசத்தவறியதில்லை.
இந்த நிலையில், இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில், “முதல்வராகவும், பிரதமராகவும் இத்தனை ஆண்டுகளில் எதேனும் செய்யத் தவறியிருக்கிறீர்களா? என அபர்னா ரெட்டி என்பவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி உலகின் தொன்மையான தமிழ் மொழியை என்னால் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது என்று பதிலளித்தார்.
உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை என்னால் கற்பதற்குப் போதுமான முயற்சிகளை எடுக்க முடியாமல் போனதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். தமிழ் இலக்கியம் மிகவும் அழகானது'' என்றார்.
2019ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் நாகரிக உள்ளுணர்வு குறித்த தனது செய்தியை எப்போதும் அதன் எல்லைகளுக்கு அப்பால் பார்க்கும்படி தமிழ் தத்துவஞானி-கவிஞர் கனியன் புங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பழமொழியை அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.

மதுரையை சேர்ந்த முருகேசன்
இதனிடையே, வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வரும் மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவரை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இவர் மதுரை மேலக்கல் பகுதியைச் சேர்ந்தவர்.