ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

குஜராத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை பாதுகாக்க ரூ.800 கோடியில் புதிய திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

  இதில் ரயில்வே திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ.16,000 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 357 கிமீ தூரத்திற்கான புதிய ரயில் பாதை தொடக்கம், 166 கிமீ தூரத்திற்கு ரயில்வே பாதை புனரமைப்பு, 81 கிமீ தூர ரயில் பாதை மின் மயமாக்கல், சூரத், உத்னா, சோம்நாத், சபர்மதி ஆகிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவற்றுக்கு இன்று பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், கேதா, ஆனந்த், வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் ரூ.680 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார். மேலும், வதோதராவில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள குந்தேலா என கிராமத்தில் ரூ.425 கோடி செலவில் புதிய மத்திய பல்கலைக்கழகம் கட்டுவதற்கான அடிக்கலை பிரதமர் நாட்டினார்.

  மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை பாதுகாக்க ரூ.800 கோடியில் புதிய திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களில் மாதம்தோறும் ஒரு துவரம்பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், 2 கிலோ வெள்ளை கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும்.

  மேற்கண்ட திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'பெண்களின் வளர்ச்சி தான் 21ஆம் நூற்றாண்டு இந்தியாவை வேகமாக வளர்ச்சியடைய செய்ய உதவும். பெண்களின் தேவைகளை, கனவுகளை பூர்த்தி செய்ய தற்போதைய அரசு திட்டமிட்டு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புத்துறை தொடங்கி சுரங்கத்துறை வரை அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்புக்காக அரசு அனைத்து கதவுகளை திறந்துள்ளது. ஒரு தாயாரின் உடல் நலக்குறைவு அந்த பெண்ணை மட்டுமல்லாது குழந்தையையும் பாதிக்கிறது. எனவே,இந்த புதிய ஊட்டச்சத்து தாய்மார்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றும். குறிப்பாக பழங்குடி இன தாய்மார்கள் இந்த திட்டங்களால் பெரிதும் பயனடைவர்' என்றார்.

  இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் மட்டும் போதும்.. குடியரசுத் தலைவர் பொறுப்பு வேண்டாம்.. கைவிரித்தார் பரூக் அப்துல்லா

  நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்திற்கு சமீப காலமாக அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் வருகிறார். இம்மாநிலத்தில் 1995ஆம் ஆண்டு முதலே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடைசியாக, 1985ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Gujarat, PM Modi