ஹோம் /நியூஸ் /இந்தியா /

’பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதே தீபாவளி’ - ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடிய மோடி பேச்சு!

’பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதே தீபாவளி’ - ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடிய மோடி பேச்சு!

கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி

கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி

கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி வந்தே மாதரம் பாட்டு பாடி உற்சாகத்துடன் கொண்டாடினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kargil, India

  தீபாவளி பண்டிகை இன்று கோலாகமாக கொண்டாப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ட்விட்டர் வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி என்பது ஒளி மற்றும் ஒளிக்கதிர்களுடன் தொடர்புடையது. இந்தப் புனிதமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி தந்து மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் ஓர் அற்புதமான தீபாவளியைக் கொண்டாட வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

  2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்தாண்டு தீபாவளியை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் கொண்டாடினார். இன்று காலை கார்கில் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பின்னர் வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை வழங்கினார்.

  பின்னர் வீரர்கள் இசை கருவிகளை வாசித்து பாட்டு பாடி மகிழ்ந்தனர். இதில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். அப்போது ஏஆர் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை வீரர்கள் உற்சாகத்துடன் பாடிய நிலையில், வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் வந்தே மாதரம் பாடலை கைத்தட்டி ஆர்வத்துடன் பாடினார்.

  தொடர்ந்து வீரர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "நீங்கள் அனைவரும் எனது குடும்பமாக பல ஆண்டுகள் இருந்து வருகின்றீர்கள். உங்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெருமை. பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தமாகும்.

  இதையும் படிங்க: ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

  கார்கில் போர் அதற்கு சிறந்த உதாரணம். கார்கிலில் நமது படைகள் பயங்கரவாத்தை அழித்தது. அதற்கு சாட்சியாக நான் இன்னும் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது. நாட்டின் உள்ளே மற்றும் வெளியே இருந்து செயல்படும் எதிரிகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்வதே இதற்கு காரணம்" எனப் பேசினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Army, Deepavali, Indian army, PM Modi