Home /News /national /

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

சர்வேயின் படி 72 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடி நாட்டை சரியான திசையில் கொண்டு செல்வதாக நம்புகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் புகழ் குறித்து தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் உலகின் 22 உலகத் தலைவர்கள் சேர்க்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர். இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார்.

    இந்த கணக்கெடுப்பில் சுமார் 75 சதவிகித அப்ரூவல் ரேட்டிங்குடன் பிரதமர் மோடியை பிரபலமான தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன்மூலம் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா அதிபர் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோரை விடவும் பிரபலமான நபராக பிரதமர் மோடி உள்ளார்.


    பிரதமர் மோடிக்கு அடுத்து 2ஆவது இடத்தில் மெக்சிகோ அதிபர் லோபேஸ் ஓப்ரடார் 63% அப்ரூவல் ரேட்டிங் பெற்றுள்ளார். 58% ஆதரவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோனி அல்பனிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 41% ஆதரவே கிடைத்து மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார். அதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 25% ஆதரவு தான் உள்ளது. தென் கொரிய அதிபர் யூன் சியோக் யோல் வெறும் 21% ஆதரவு பெற்று மிக மோசமான இடத்தில் உள்ளார்.

    இதையும் படிங்க: மாநில அரசிடம் உள்ள ரூ.38,000 கோடி நிதியை கட்டுமான தொழிலாளர்களுக்காக பயன்படுத்துங்கள் - பிரதமர் மோடி கோரிக்கை

    இந்த சர்வேயின் படி, 72 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடி நாட்டை சரியான திசையில் கொண்டு செல்வதாக நம்புகின்றனர். கோவிட் இரண்டாம் அலையின் போதுதான் பிரதமர் மோடியின் மீதான அப்ரூவல் ரேட்டிங் சிறிது சரிவு 65% ஆக குறைந்தது.பின்னர் ஓராண்டில் இந்த எண்ணிக்கை மீண்டும் உயர்வு கண்டு 75% தற்போது எட்டியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Boris johnson, Joe biden, PM Modi

    அடுத்த செய்தி