Home /News /national /

பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ஜன.12ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி!

பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ஜன.12ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி!

Modi

Modi

மதுரையில் ஜனவரி 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் மோடி பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடத்தப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.

    இந்தநிலையில் கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக சார்பில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

    Also read:  உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில் ஜனவரி 12 பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற பின் ஹெலிகாப்டர் மூலம் விருதுநகரில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். தமிழக பாஜக பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Also read:  லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Modi, PM Modi

    அடுத்த செய்தி