சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும்? மக்களிடம் கருத்து கேட்கும் மோடி

தனது தலைமையிலான இரண்டாவது ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றவுள்ளார்.

news18
Updated: July 19, 2019, 3:37 PM IST
சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும்? மக்களிடம் கருத்து கேட்கும் மோடி
பிரதமர் மோடி
news18
Updated: July 19, 2019, 3:37 PM IST
சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தினவிழா அடுத்த மாதம் 15-ம் தேதி வர உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தனது தலைமையிலான இரண்டாவது ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்.

”இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது எனது உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது விலைமதிப்புள்ள கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். இதற்காக ‘நமோ ஆப்’பில் ஒரு பிரத்யேக தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


உங்களுடைய எண்ணங்களை டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து  நம் நாட்டில் வாழும் 130 கோடி மக்களும் கேட்கட்டும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று பதிவிட்டுள்ளார்.

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...