Home /News /national /

‘இந்தியாவுக்கு வாங்க’... ஜப்பான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

‘இந்தியாவுக்கு வாங்க’... ஜப்பான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

‘இந்தியாவுக்கு வாங்க’... ஜப்பான் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு!

‘இந்தியாவுக்கு வாங்க’... ஜப்பான் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு!

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கு இடையில் இயற்கையாகவே நட்புறவு உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த உறவை மேலும் பலப்படுத்தும் பிராண்ட் தூதர்களான வணிக சமூகத்தினரை பாராட்டினார்.

க்வாட் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள தொழிலபதிபர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய க்வாட் அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 23ம் தேதி அன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்னணி தொழிலதிபர்களையும் பல்வேறு துறை சார்ந்த தொழில் துறையினரையும் சந்தித்து, இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்புகள் மற்றும் அதனால் அந்நிறுவனங்கள் அடையக்கூடிய பலன்கள் குறித்து விளக்கமளித்தார். இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்கங்கள் தங்களது கிளைகள் மற்றும் தொழிற்சாலைகளை அமைக்க அழைப்பு விடுத்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பானின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறும் விதமாக ‘ஜப்பான் வாரம்’ கொண்டாடப்படும் என்றும் முன்மொழித்தார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் உள்ள தொழில் துறையினருடனான வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் 34 ஜப்பானிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சிஇஓக்கள் பங்கேற்றனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் முதலீடுகள் மற்றும் செயல்பாடுகளை கொண்டுள்ளன. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், குறைக்கடத்திகள், எஃகு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வங்கி மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (JBIC), ஜப்பான்-இந்தியா வணிக ஆலோசனைக் குழு (JIBCC) மற்றும் இன்வெஸ்ட் இந்தியா போன்ற இந்தியா மற்றும் ஜப்பானின் முக்கிய வணிக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்றன.

Also Read : "ஜீன்ஸ் பேண்ட் அணிய எதிர்ப்பு".. சிறுமியை குடும்பத்தினரே அடித்துக்கொன்ற கொடூரம்!

உலகளாவிய அன்னிய நேரடி முதலீட்டில் மந்தநிலை இருந்தபோதிலும், முந்தைய நிதியாண்டில் இந்தியா 84 பில்லியன் அமெரிக்க டாலர்களை எஃப்டிஐ ஈர்த்துள்ளது என்றும், மேலும் இது இந்தியாவின் பொருளாதார திறன் மீதான நம்பிக்கையை நிரூபிக்க கூடியது என்றும் தெரிவித்தார். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கு இடையில் இயற்கையாகவே நட்புறவு உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த உறவை மேலும் பலப்படுத்தும் பிராண்ட் தூதர்களான வணிக சமூகத்தினரை பாராட்டினார்.

மார்ச் 2022 இல் பிரதமர் கிஷிடாவின் இந்தியப் பயணத்தின் போது, ​​இரு நாடுகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானிய யென் 5 டிரில்லியன் முதலீடு செய்ய லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளன தெரிவித்தார். இந்தியா-ஜப்பான் தொழில்துறை போட்டித்திறன் கூட்டாண்மை (IJICP) மற்றும் தூய்மையான எரிசக்தி கூட்டாண்மை போன்ற பொருளாதார உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்களையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் (NIP), உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம் மற்றும் குறைக்கடத்தி கொள்கை போன்ற முன்முயற்சிகளைப் பற்றி பேசிய அவர், இந்தியாவில் புதிய தொழில் தொடங்க சாதகமாக உள்ள அமைப்புகளை முன்னிலைப்படுத்தி, ஜப்பான் தொழில் நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

இந்த வட்டமேஜை மாநாட்டில் ஹோண்டா மோட்டார், நிஷான் மோட்டார் கார்ப்ரேஷன், டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷன், யமஹா, சுசூகி உள்ளிட்ட பிரபல வாகன தயாரிப்பு நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Japan, PM Modi

அடுத்த செய்தி