பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு...!

பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு...!
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: January 2, 2020, 7:40 AM IST
  • Share this:
தேர்வுகளுக்கு தயாராவது குறித்து பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் பொங்கல் பண்டிகை உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை விடப்படுவதால், 16-ம் தேதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேர்வினை எந்தவொரு நெருக்கடியுமின்றி எழுதுவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.


டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றும் உரையை கண்டுகளிக்க அன்றைய தினம் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், மாணவர்கள் வர வேண்டியது கட்டாயமில்லை என்று அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்மாநிலங்களில் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட திருவிழாக்களுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதால், பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
First published: January 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்