’தனது குருவை அவமானப்படுத்தி வெளியேற்றியவர் மோடி’- விளாசும் ராகுல்

’70 வயது மேற்பட்டோருக்கு கட்சியில் சீட் இல்லை என்பதாலே இம்முறை அத்வானிக்கு இடம் அளிக்கப்படவில்லை.'

Web Desk | news18
Updated: April 5, 2019, 7:37 PM IST
’தனது குருவை அவமானப்படுத்தி வெளியேற்றியவர் மோடி’- விளாசும் ராகுல்
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: April 5, 2019, 7:37 PM IST
”பிரதமர் நரேந்திர மோடி தனது குருவான எல்.கே.அத்வானியை அவமானப்படுத்தியுள்ளார். குருவை மரியாதைக் குறைவாக நடத்துவது என்பது இந்து கலாச்சாரத்திலேயே இல்லை” எனக் குற்றம் சுமத்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மஹாராஷ்டிரா பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “பாஜக இந்துத்வா குறித்துப் பேசுகிறது. இந்துத்வாவில் குரு தான் உயர்ந்தவர். இந்துத்வா குரு-சிஷ்யன் கலாசாரத்தைப் பேசுகிறது. மோடியின் குரு யார்? அத்வானி. மோடி அத்வானியை அவமரியாதை செய்து ஒதுக்கியுள்ளார்” எனப் பேசினார்.

அத்வானி கடந்த ஆறு மக்களவைத் தேர்தல்களில் வெற்றிப் பெற்ற தொகுதியான காந்திநகரில் இம்முறை அவருக்கு சீட் மறுக்கப்பட்டு அந்தத் தொகுதி அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரசின் ‘நியாய்’ திட்டத்தை விமர்சிக்கும் பாஜக, சொல்லியபடி ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் தரும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே? என்றும் கேள்வி எழுப்பினார்.

70 வயது மேற்பட்டோருக்கு கட்சியில் சீட் இல்லை என்பதாலே இம்முறை அத்வானிக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தை மையப்படுத்தித்தான் தற்போது ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும் பார்க்க: “என் கட்சிக்குள் பல மாப்பிள்ளைகள் இருக்காங்க” குடும்ப அரசியல் பற்றி சீமான் கருத்து...!
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...