பழங்குடி சமூக மக்களின் கலாசாரத்தை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் வகையிலான ஆதி மகோத்சவ் திருவிழா டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. மத்திய பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில், டெல்லி மேஜர் தியான் சந்த் அரங்கத்தில், ஆதி மகோத்சவ திருவிழா தொடங்கியது.
பழங்குடி மக்களின் கலாச்சாரம், வர்த்தகம், பாரம்பரியம், கலைநிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பழங்குடி மக்களின் கைவினை பொருட்கள், சிறுதானிய வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சி அரங்குகளையும் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, 21 நூற்றாண்டு இந்தியா என்பது, அனைவரையும் உள்ளிடக்கி அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையின் படி பயணிக்கும் இந்தியாவாகும். பழங்குடி மக்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சி என்பது எனது தனிப்பட்ட உணர்வுகளுடன் இணைந்த ஒன்று என்று கூறினார்.
முன்னதாக, பழங்குடி சமூக மக்களின் அடையாளங்களில் ஒருவரான பிர்சா முண்டா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இத்திருவிழாவில் கைத்தறி பொருட்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவை இடம்பெறும் வகையில் 200க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ள நிலையில், பாரம்பரிய நடனம் அனைவரையும் கவர்ந்தது.
இன்று தொடங்கி பிப்ரவரி 27 வரை மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இந்த திருவிழா நடைபெறவுள்ளது. 2023 ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்படுவதால், கைவினைப் பொருட்கள், கைத்தறி, மண்பாண்டங்கள், நகைகள் போன்ற வழக்கமான ஈர்ப்புகளுடன், “ஸ்ரீ அன்னை” என்று கூறப்படும் பழங்குடியினரால் பயரிடப்படும் தானியங்களை காட்சிப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.