Home /News /national /

சிக்கிமின் முதல் விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

சிக்கிமின் முதல் விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம்- முதல் விமான நிலையம் திறக்கப்பட்டது

சிக்கிம்- முதல் விமான நிலையம் திறக்கப்பட்டது

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் சுமார் 605 கோடி ரூபாய் செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்த விமான நிலையத்தில் தடுப்புச்சுவர் 80 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    விமான செல்லும் ஓடுதளம்


    பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த விமான நிலையம் சிக்கிமில் உள்ள பாக்யாங் நகரில் சுமார் 201 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 4-ம் தேதி முதல், இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிக்கிம் விமான நிலையத்தின் நுழைவாயில்


    பிரதமர் வருகையையொட்டி சிக்கிம் மாநில விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, சிக்கிமிலுள்ள இயற்கை அழகை ரசித்ததோடு, அதைப் படம்பிடித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.



    விமான நிலையத்தின் முன்பகுதி


    இந்த விமான நிலையம் 9 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு இப்பொழுதுதான் திறக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: First Airport, Gangtok, Pakyong Airport, PM Modi, Sikkim

    அடுத்த செய்தி