முகப்பு /செய்தி /இந்தியா / "இந்தியாவில் பயணிகள் விமானம் விரைவில் தயாரிக்கப்படும்... " - பிரதமர் மோடி நம்பிக்கை

"இந்தியாவில் பயணிகள் விமானம் விரைவில் தயாரிக்கப்படும்... " - பிரதமர் மோடி நம்பிக்கை

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி, மேடையிலே பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

இந்தியாவில் பயணிகள் விமானம் விரைவில் தயாரிக்கப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டது. தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஒரு மணி நேரத்தில் 300 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இதனை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, வரும் காலங்களில் இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும் என்றார். இந்தியாவின் புதிய திறன்களால் ஏர் இந்தியா புத்தாக்கம் பெற்று இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி, மேடையிலே பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொண்டர்கள் மொபைலில் டார்ச் அடித்து, எடியூரப்பாவிற்கு வாழ்த்து கூறுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து 990 கோடி மதிப்பிலான 2 ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். பின்னர், 215 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி காரில் ஊர்வலமாக சென்றார். புதிய விமான நிலையம் திறப்பு மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு, பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேரணி மேற்கொண்டார். அப்போது காரின் கதவை திறந்து கொண்டே சிறிது தூரம் பயணம் சென்ற மோடி, தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.

First published:

Tags: BS Yeddyurappa, Karnataka, PM Modi