ஹோம் /நியூஸ் /இந்தியா /

மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி..!

மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி..!

மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் சுமார் 35 கிமீ தூரத்திற்கான 2ஏ மற்று 7 ஆகிய இரு மெட்ரோ ரயில் வழித் தடத்தை தொடங்கிவைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவின் தலைநகர் என நாம் டெல்லியை அழைத்தாலும், நாட்டின் பொருளாதார தலைநகராக கருதப்படுவது மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரமே. இந்த மும்பை நகரின் பொது போக்குவரத்து சேவை நீண்டகாலமாக நெருக்கடியை  எதிர்கொண்டு வருகிறது.

எனவே,மும்பைக்கு விரிவான மெட்ரோ ரயில் சேவை தேவை என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. 2014ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டாலும் பெயரளவில் 11 கிமீ தூரம் மட்டுமே செயல்பட்டது. டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் விரிவான மெட்ரோ சேவைகள் ஆண்டு கணக்காக செயல்பட்டு வரும் நிலையில், மும்பையின் விரிவான மெட்ரோ சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.12,600 கோடியாகும்.

மும்பைக்கு நேற்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி சுமார் 35 கிமீ தூரத்திற்கான 2ஏ மற்று 7 ஆகிய இரு மெட்ரோ ரயில் வழித் தடத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பங்கேற்றனர். திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் குண்டாவலி மற்றும் மோக்ரா வழித் தடங்கள் இடையே மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

அவருடன் மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிபுரிந்தவர்களும், பொதுமக்களும் உடன் பயணித்தனர். அப்போது மெட்ரோ ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பிரதமர் மோடி உரையாடினார்.இந்த மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா தனது கனவுகளை நனவாக்கும் துணிச்சலை இப்போதுதான் முதல் முறையாகக் கொண்டுள்ளது.

இது அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற இணைப்பை வழங்கும். இந்த வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். 18.6 கி.மீ. நீளம் கொண்ட 2ஏ (மஞ்சள் தடம்) தஹிசார் - தாதர் நகர் இடையேயும், 16.5 கி.மீ. நீளம் கொண்ட தடம் 7 (சிவப்பு தடம்) அந்தேரி கிழக்கு- தஹிசார் கிழக்கு இடையே அமைக்கப்பட்டு உள்ளது.

First published:

Tags: Metro Rail, Metro Train, Mumbai, PM Modi