Home /News /national /

பிரதமர் மோடி கேரளா வருகை.. கொச்சி மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார்

பிரதமர் மோடி கேரளா வருகை.. கொச்சி மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார்

பிரதமர் மோடி ,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

பிரதமர் மோடி ,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அர்ப்பணிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kochi [Cochin], India
    கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, கொச்சி மெட்ரோ திட்ட இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலையில் பிரதமர் மோடி கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார்.  குருப்பந்தாரா-கோட்டயம்-சிங்கவனம் ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்திய ரயில்வேயின் 27 கிலோ மீட்டர் இரட்டைப் பாதையை பிரதமர் திறந்து வைத்தார்.

    மேலும் கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் கொல்லம்-புனலூர் இடையே சிறப்பு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 76 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கொல்லம்-புனலூர் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட பகுதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், கொச்சி மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

    இதையும் வாசிக்க: மணீஷ் சிசோடியா வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு - கிடைத்தது என்ன?

    முன்னதாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமத்திற்கு சென்ற பிரதமர், ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்தார். இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டை அணிந்து பிரதமர் கலந்துகொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chief Minister Pinarayi Vijayan, Kerala, Kochi, PM Modi

    அடுத்த செய்தி