முகப்பு /செய்தி /இந்தியா / சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

கர்தவ்யா பாதை

கர்தவ்யா பாதை

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமா், குடியரசுத் துணைத் தலைவா் இல்லங்கள், மத்திய அமைச்சகங்களின் செயலகம் ஆகியவற்றோடு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் ரூ. 13,450 கோடி  செலவில் மத்திய நகா்புற வளா்ச்சித் துறை மேற்கொண்டது. இதில் ராஜ பாதையில் பொதுமக்களின் வசதிகளுக்காக சென்ட்ரல் விஸ்டா மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர், சென்ட்ரல் விஸ்டா வளாகத்தையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையையும் திறந்து வைத்தார்.

இதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் கண்காட்சியில் உள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். தொடர்ந்து கடந்த 20 மாதங்களாக இந்த சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை அமைக்கும் பணிகளில் பங்குபெற்ற ஊழியர்களிடம் கலந்துரையாடினார்.

இதையும் வாசிக்க: பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் பிரமிக்க வைக்கும் கழுகு பார்வை வீடியோ

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காலனித்துவத்தின் சின்னம் அழிக்கப்பட்டு விட்டதாக கூறினார். கடமை பாதை வடிவத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். காலனித்துவத்தின் மற்றொரு அடையாளத்திலிருந்து நாம் வெளியே வரும் இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்த மோடி, ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஆங்கிலேயர்களின் பிரதிநிதி ஒருவரின் சிலை அங்கு இருந்ததாக குறிப்பிட்டார். நேதாஜியின் சிலை நிறுவப்பட்டதன் மூலம், அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான புதிய பாதையை நிறுவியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Delhi, Parliament, PM Modi